×

கோர்ட் உத்தரவால் நடவடிக்கை இரட்டை வாய்க்காலில் சாயக்கழிவு நீர் கலப்பா?

கரூர், டிச. 11: கரூர் நகராட்சிக்குட்பட்ட இரட்டை வாய்க்காலில் சாயக்கழிவு நீர் கலக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கரூர் நகரின் வழியாக செல்லும் இரட்டை வாய்க்கால் பகுதியின் சில இடங்களில் சாயக்கழிவு நீர் மற்றும் பிற கழிவுகள் கலக்கப்படுவதாக பல்வேறு தரப்புகளில் இருந்தும் புகார்கள் வந்தன. இதனையடுத்து, கோர்ட் உத்தரவின்படி, சுற்றுச்சூழல் அதிகாரி ரவிச்சந்திரன், நகராட்சி அதிகாரி கார்த்திக் ஆகியோர் கொண்ட குழுவினர், லைட்ஹவுஸ் கார்னர் உட்பட ஐந்து பகுதிகளில் இரட்டை வாய்க்கால் தண்ணீரை சேமித்து, சாய்ககழிவு கலக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, ஆய்வுக்கு பிறகு முடிவுகள் கோர்ட்டுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த பணி மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்