கரூர் சர்ச் கார்னர் பகுதியில் நிழற்குடை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர், டிச. 11: கரூர் சர்ச் கார்னர் பகுதியில் உள்ள நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் சர்ச் கார்னர் பகுதியில் நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. சர்ச் கார்னர் பகுதியில் இருந்து வாங்கல், நெரூர், மண்மங்கலம், வாங்கப்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பயணிகளும் சர்ச் கார்னர் வழியாக செல்லும் பேருந்துகளில் ஏறிச் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நிழற்குடை உட்புறமும், மேற்புற பகுதிகளும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக இந்த பகுதியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். மழைக்காலங்களில் ஒதுங்க கூட முடியாத அளவில் இந்த நிழற்குடை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நிழற்குடையை சீரமைத்து, பயணிகள் பயமின்றி பயன்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: