×

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை – மைசூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!

 

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை – மைசூரு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: விநாயகர் சதுர்த்தியையொட்டி நெல்லை – மைசூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மைசூருவில் இருந்து வரும் 26-ம் தேதி (செவ்வாய்கிழமை) இரவு 8.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06241) மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லையை வந்தடையும்.

மறுமார்க்கத்தில், நெல்லையில் இருந்து 27-ம் தேதி (புதன்கிழமை) மதியம் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06242) மறுநாள் காலை 5.50 மணிக்கு மைசூருவை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், பெங்களூரு வழியாக இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Nella ,Mysore ,Vinayagar Chaturthi ,Chennai ,Southern Railway ,Vinayagar Chaturthiaioti ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...