வாலிபர் கைது 5 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சி, டிச.10: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

வழிப்பறி ரவுடி குண்டாசில் கைது திருச்சி, டிச.10: திருசி மத்திய பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ் புரோக்கராக செந்தண்ணீரபுரத்தை சேர்ந்த சகாயராஜ்(56) என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 11ம் தேதி கலெக்டர் ஆபீஸ் ரோடு, மருத்துவமனை சந்திப்பில் நின்றுகொண்டிருந்தபோது டூவீலரில் வந்த 3 நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி தனது சட்டை பையில் வைத்திருந்த பணம் ரூ.2000த்தை பறித்து சென்றுவிட்டதாக கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்த திருப்பதி(23), கே.கே.நகரை சேர்ந்த பிரகாஷ்(26) மற்றும் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணியை சேர்ந்த சுப்பிரமணியன் கிஷோர்குமார்(23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் திருப்பதி மீது ஏற்கனவே திருச்சி மாநகரம் கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 3 வழக்கும், அமர்வு நீதிமன்ற காவல் நிலையம், அரியமங்கலம், கே.கே.நகர், எ.புதூர் ஆகிய காவல்நிலையங்களில் தலா 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 8 வழக்குகள் விசாரணையில் இருந்தது தெரிந்தது.  இதனால் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் போலீசார் திருப்பதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>