சோனியாகாந்தி பிறந்த நாளையொட்டி 75 வயதை கடந்த 6 தம்பதிக்கு சீர்வரிசை பொருட்கள்

பட்டுக்கோட்டை, டிச. 10: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாளையொட்டி பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி ஓபிசி பிரிவு சார்பில் 75 வயதை கடந்த விவசாய தம்பதிகளுக்கு பாதபூஜை செய்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் பிரபு தலைமை வகித்தார். ஓபிசி பிரிவு சட்டமன்ற தொகுதி தலைவரும், கல்யாண ஓடை ஊராட்சி தலைவருமான மதிவாணன் வரவேற்றார். முதலில் 6 தம்பதிகளுக்கு மாலை அணிவித்து அவர்களது பாதங்களை தொட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் இளைஞர் மற்றும் மாணவர் காங்கிரசார் வணங்கினர்.

அதைதொடர்ந்து நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜாதம்பி, திருவோணம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், மூத்த நிர்வாகி வைரக்கண்ணு, காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன் பங்கேற்று தலா ரூ.2,000 மதிப்புள்ள வேட்டி, சேலை உட்பட சீர்வரிசை பொருட்களை வழங்கினர். மேலும் தூக்கு வாளி, கொரோனா ஹோமியோபதி மாத்திரை உட்பட தலா ரூ.1,000 மதிப்புள்ள சீர்வரிசைகளை வழங்கினர். நிகழ்ச்சிகளை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் சிவா ஒருங்கிணைத்தார். மாவட்ட மாணவரணி தலைவர் காந்த் நன்றி கூறினார்.

Related Stories:

>