×

காங்கிரசார் வழங்கினார் குவிந்து கிடக்கும் குப்பைகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா உடல் தானம்

கும்பகோணம், டிச. 10: மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதாவின் உடல் மாணவர்களின் ஆய்வுக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. கும்பகோணம் துவரங்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா (87). இவர் உடல்நிலை குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 6ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இறந்தார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் எஸ்.ஆர்.ராதா உடல் நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் உட்பட அனைத்து கட்சி பிரமுகர்கள் இரங்கல் கூட்டம் நடத்தி புகழஞ்சலி செலுத்தினர். இதைதொடர்ந்து எஸ்.ஆர்.ராதா விருப்பபடி அவரது உடல், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாணவர்களின் ஆய்வுக்காக தானமாக வழங்கப்பட்டது.

Tags : Congress ,SR Radha ,Medical College Hospital ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...