விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, டிச. 10: விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை சரபோஜி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யகோரி டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தஞ்சை சரபோஜி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை உடனே திரும்ப வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் உடனே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories:

>