×

விவசாய நிலத்தில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் விவசாயி சடலம்

*உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே விவசாய நிலத்தில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் விவசாயி சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தில் வசித்து வந்தவர் அழகப்பன் மகன் ராதாகிருஷ்ணன் (55) விவசாயி. இவர் நேற்று காலை தனது வீட்டில் இருந்து விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் அவரை தேடி வயலுக்குச் சென்றபோது அங்கு வரப்பு பகுதியில் உடல் முழுவதும் தீக்காயத்துடன் சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் ராதாகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனைக்காக சவ கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். வயல்வெளியில் மின்சாரம் தாக்கி ராதாகிருஷ்ணன் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Ulundurpettai ,Radhakrishnan ,Alagappan ,Nagar ,Kallakurichi ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...