×

போக்குவரத்து இடையூறு திருமயம் வட்டாரத்தில் உழவர்-அலுவலர் தொடர்பு திட்டம்

திருமயம், டிச.10: திருமயம் வட்டாரத்தில், தோட்டக்கலைதுறை அதிகாரிகள் விளைநிலங்களுக்கே சென்று விவசாயிகளை சந்தித்து ஆலோசனை வழங்கும் உழவர் -அலுவலர் தொடர்பு திட்டம் தோட்டக்கலைத்துறையில் தொடங்கப்பட்டடுள்ளது என தோட்டக்கலைஉதவி இயக்குநர் முனைவர் தீபாதேவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: திருமயம் வட்டாரத்திலுள்ளஅனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் தோட்டக்கலை அலுவலர்கள் நேரடியாக விளைநிலங்களுக்குச் சென்று விவசாயிகளை சந்தித்து ஆலோசனைகள் வழங்குவதுடன் நவீன தோட்டக்கலை சாகுபடிதொழில் நுட்பங்கள் மற்றும் உழவர்நலன் காக்கும் மானியத் திட்டங்களை உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். மேலும், பயிர் சாகுபடி நிலவரம் குறித்த தகவல்களை அவ்வப்போது சேகரித்து அதற்கேற்றாற்போல் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்படும்.

தோட்டக்கலை உதவி அலுவலர்கள் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளின் வயல்களில் தொழில்நுட்ப செயல் விளக்கங்களை நடத்துதல், விவசாயிகளுக்கும் பயிற்சி மற்றும் கண்டுணர் சுற்றுலா ஏற்பாடு செய்தல், கூட்டங்கள், பண்ணைப் பள்ளிகள், பல்வேறு திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து விவசாயிகளுடன் கலந்து உரையாடுதல் மற்றும் நவீனதொழில்நுட்பத்தினை விவசாயிகளுக்கு தெரியபடுத்துதல் போன்ற பலவிதமான விரிவாக்க பணிகளை மேற்கொள்வார்கள்.
மேலும், 15 நாட்களுக்கு ஒருமுறை வானிலைமுன்னறி விப்புபற்றிய விவரங்களையும் விவசாயிகளுக்கு தெரிவிப்பார்கள். ஒவ்வொரு கிராமஊராட்சியிலும் குறைந்தபட்சம் 10 முன்னோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுஅவர்களுக்கு பலவேறு உயர்தொழில் நுட்பங்கள் மற்றும் அரசின் மானியதிட்டங்கள் குறித்த விளக்கம் மற்றும் பயிற்சிகள் உரிய இடைவெளியில் தொடர்ந்து வழங்கப்படும். முன்னோடி விவசாயிகள் உழவர் பெருமக்களுக்கும் தோட்டக்கலைத்துறைக்கும் ஒரு பாலமாக செயல்படுவார்கள். இத்திட்டத்தின் மூலம் தோட்டக்கலை அலுவலர்கள் விவசாயிகளையும் விவசாயகுழுக்களையும் நிரந்தர பயணத்திட்டத்தின்படி சந்திப்பார்கள். எனவே, திருமயம் வட்டாரத்திலுள்ள விவசாய பெருமக்கள் உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.

தோட்டக்கலைத் துறையின் மூலமாக இயற்கை முறையில் காய்கறி சாகுபடிசெய்யும் விவசாயிகளுக்கு சாகுபடிசெய்வதற்கு தேவையாக ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. தக்காளி, வெண்டை மற்றும் கத்தரி போன்றவை சாகுபடி செய்வதற்கு ஹெக்டேருக்கு ரூ.4000 மற்றும் ரூ.3750 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேர்வரை ஊக்கத்தொகை பெற்று பயனடையலாம். விவசாயிகள் தனியாகவும் விவசாய குழுக்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்குதாங்கள் திருமயம் வட்டாரத்திலுள்ள தோட்டக்கலைஉதவி இயக்குநர், தோட்டக்கலைதுணைஅலுவலர்மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்களை அணுகலாம்.

Tags : Traffic Disruption District ,
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...