×

காசா நகரை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை தீவிரம்: வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல் படைகள்

இஸ்ரேல்:காசா நகரை கைப்பற்றுவதற்கான புதிய ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் முக்கிய கோட்டையாக கருதப்படும் காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த புதிய தாக்குதல்கள் அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயர செய்திருந்த நிலையில் மனிதாபிமான நெருக்கடி நிலையை மேலும் மோசமாக்கும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது. பிணை கைதிகள் விடுவிப்பு மற்றும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில் இந்த ராணுவ நடவடிக்கை மேலும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Tags : GAZA CITY ,ISRAELI ,Israel ,Gaza ,Hamas ,
× RELATED தைவான் மெட்ரோவில் மர்ம நபர் கத்திக்குத்து; 3 பேர் பலி