குன்னம் தாலுகா பகுதிகளில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது

பெரம்பலூர், டிச.10: குன்னம் தாலுகா அகரம் சீகூர் சுற்று வட்டார கிராம ங்களில் தொடர்மழை கார ணமாக தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பெரம்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே தென்மேற்கு பருவ மழை பெய்து முடித்த நிலை யில், வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. அதே வேளையில் அடுத்தடுத்து நிவர்புயல், புரெவி புயலின் தாக்கத்தால் கனமழை பெய்தது இதன் காரணமாக கல்லாறு, வெள்ளாறு, கோனேரிஆறு, சின்னாறு, மருதையாறு போன்ற ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தது.பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில்உள்ள 73 ஏரிகளில் 12 ஏரிகள் நிரம்பி வழிந்து வருகின்றன.

தொடர் மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடையும் விவசாயிகள், மழைநீரால் சாகுபடி செய்துள்ள பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாவதை கண்டு பெரும் அச்சத்திலும் அதிர் ச்சியில் உள்ளனர்.

குறிப்பாக மானாவாரி பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே மக்காச்சோளம், பருத்தி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில், தற்போது குன்னம் தாலுக்கா வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது விவசாயிகளை பெரும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.

இதில் வேப்பந்தட்டை தாலுகா இனாம்அகரம், திருவாலந்துறை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. அதேபோல் வேப்பூர் தாலுக்காவில் அகரம்சீகூர், கீழப்பெரம்பலூர், வயலப்பாடி, அத்தியூர், பள்ளக் காலிங் கராய நல்லூர், மேட்டுக் காலிங்கராய நல்லூர் உள் ளிட்ட கிராமங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்கள்அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. கடந்த 1 வாரத்திற்கும் மேலாக வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியாமல் உள்ளதால் தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்கள் அனைத்தும் அழுகி வீணாகிப்போய் விட்டதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு ரூ30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டக்கூட முடியாத சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள அகரம் சீகூர் பகுதி விவசாயிகள் தங்கள் வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து மாவட்ட அளவில் கணக்கெடுப்பு நடத்தி பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>