×

எண்ணெய் நிறுவனம் கரையை சேதப்படுத்தியதால் ஏரி நீர் புகுந்ததால் திருமாந்துறை கிராமம் தத்தளிப்பு

பெரம்பலூர், டிச.10: பெரம்ப லூர் அருகே எண்ணெய் நிறுவனம் கரையை பெய ர்த்துப் போட்டதால் ஏரிநீர் உப்புகுந்து லெப்பைக்குடிகாடு பேரூராட்சி மற்றும் திருமாந்துறை ஊராட்சியில் 30க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் தீவு க்குள் சிக்கியதைபோல் திண்டாடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு அருகே தென்மேற்கு திசையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரி உள்ளது. கடந்த சிலவாரங்களாக எறையூர் பகுதியிலிருந்து திருமாந்துறை அருகே வெள்ளாறு நோக்கி இந்தியன் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் இப்பகுதியில் ஏரியின் கரையோரம் கேஸ் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வந்தது. புயல் மழைக்கு முன்பு வரை இப்பணிகள் நடந்துவந்த நிலையில், பணியாளர்கள் மழை காரணமாக செய்து வந்த பணிகளை பாதியிலேயே விட்டுவிட்டு சென்று விட்டனர். இதனால் லெப்பைக்குடுகாடு ஏரிக்கரை பெருமளவு சேதமடைந்தி ருந்தது.

இந்நிலையில் கனமழை காரணமாக ஏரியின் கரை சேதமான பகுதியிலிருந்து வெளியேறிய தண்ணீர், அருகே வெள்ளாறு அணைக் கட்டிலிருந்து ஒகளூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் கலந்ததால் வாய்க்கால் நீர் வெள்ளம்போல் மிதந்து சென்றது. இந்தத் தண்ணீர் வலுவில்லாத பகுதியிலிருந்து வெளியே றியதால் திருமாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட மதீனா நகரையும், லெப்பைக்குடி காடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஜாமாலியா நகரிலும் வீ டுகளைச் சுற்றி வாய்க்கால் நீர் சூழ்ந்தது. இதனால் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்போர் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத தவித்து வருகின்றனர்.

இதனையறிந்து பேரூராட் சி செயல்அலுவலர் சதீஷ் கிருஷ்ணன், லெப்பைக்குடி க்காடு மேற்கு மெஹல்லம், கிழக்கு மெஹல்லம் ஆகிய 2 பள்ளி வாசல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தெருக்களி ல் தண்டோரா மூலம் தண்ணீர் பாதிப்பு குறித்து அறிவிப்புசெய்து மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும் கடந்த இரு தினங்களாக இரவு, பகலாக தங்கி அப்பகுதியில் மேலும் நீர்வரத்து சூழ்வதைத் தடுத்திட, தேங்கியிருக்கும் நீரைவடித்திட ஜேசிபி எந்திரங்களை கொண்டும், பேரூராட்சி துப்புரவு பணியாளர்களை கொண் டும் பாதுகாப்புபணிகளையும், தேங்கி நிற்கும் நீரால் தொற்று நோய் ஏற்படாதபடி சுகாதாரப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

Tags : village ,Thirumanthurai ,oil company ,shore ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...