×

திருவேட்டக்குடி அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை

காரைக்கால், ஆக.21: மேலகாசாக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சீருடைகளை எம்எல்ஏ சந்திர பிரியங்கா வழங்கினார் காரைக்கால் மாவட்டம் திருவேட்டகுடி அரசு உயர்நிலை பள்ளி, பூவம் காமராஜர் அரசு உயர்நிலைப்பள்ளி, மேலகாசாக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு சீருடை வழங்கினார். இந்நிகழ்வில் காரைக்கால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா, பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Thiruvettakudi Government School ,Karaikal ,MLA ,Chandra Priyanka ,Melakasakudi Government Middle School ,Thiruvettakudi Government High School ,Poovam Kamaraj Government High School ,
× RELATED ஓய்வூதியர் தின விழா