×

புலியை வேட்டையாடிய வழக்கு பவாரியா கும்பலை சேர்ந்த 3 பெண்களுக்கு 3 ஆண்டு சிறை

சத்தியமங்கலம்: புலியை வேட்டையாடிய வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கும்பலை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கடந்த 2023ல் புலியை வேட்டையாடும் பவாரியா கும்பலைசேர்ந்த 6 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் பிடித்து புலித்தோல், புலி நகங்கள் மற்றும் பற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராமசந்தர் (50), பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மங்கல்(28), பிமலா(51), சுனிதா(35), ரத்னா (40), கிரிசன் (59) ஆகிய 6 பேர் சேர்ந்து, முதுமலை புலிகள் காப்பகம் அவலாஞ்சி வனப்பகுதியில் முகாமிட்டு புலியை வேட்டையாடி அதன் தோல் மற்றும் நகங்களை எடுத்து விற்பனை செய்ய முயன்றதும், பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதுதொடர்பான வழக்கை சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரஞ்சித்குமார் விசாரித்து, 6 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

 

Tags : Sathyamangalam ,Rajasthan ,Erode district ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...