×

கீழப்பாவூர் பெரியகுளத்தில் ரூ.3.50 கோடி செலவில் படகுகுழாம் அமைக்கும் பணி அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் துவக்கிவைத்தார்

பாவூர்சத்திரம்,ஆக.22: கீழப்பாவூர் பெரியகுளத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் படகுகுழாம் அமைக்கும் பணியை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் துவக்கிவைத்தார். கீழப்பாவூர் பெரியகுளத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் படகுகுழாம் மற்றும் ஏரி மேம்பாடு செய்வதற்கான பணிகளின் துவக்க விழா சங்கரன்கோவில் அருகேயுள்ள கோதைநாச்சியார்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தென்காசி கலெக்டர் கமல்கிஷோர் தலைமையில் நடந்தது. இதையடுத்து சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெரியகுளத்தில் படகு குழாம் அமைக்கும் பணியைத் துவக்கிவைத்தார். நிகழ்வில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, கீழப்பாவூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ராஜன், செயல் அலுவலர் மாணிக்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Minister ,K.K.S.S.R.R. ,Keelappavur Periyakulam ,Pavurchathram ,K.K.S.S.R.R.Ramachandran ,Kotainachiyarpuram Panchayat Union ,Sankarankovil… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா