×

ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு புதிய இடம் நீதிபதிகள் ஆய்வு

திருமங்கலம், டிச.10:  திருமங்கலம் தர்மத்துப்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கான இடத்தை நீதிபதிகள் நேற்று ஆய்வு செய்தனர். திருமங்கலம் தாலுகா அலுவலக வளாகத்தில் முதன்மை மாவட்ட முன்சீப்கோர்ட், கூடுதல் மாவட்ட முன்சீப்கோர்ட், சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகிய நான்கு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. கடும் இடநெருக்கடியில் செயல்படும் இந்த நீதிமன்றங்களுக்கு புதிய இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது திருமங்கலம் அடுத்த தர்மத்துப்பட்டியில் கப்பலூர் டோல்கேட் அருகே 4 ஏக்கர் பரப்பளவில் நீதிபதிகள் குடியிருப்புகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மதுசூதனன், திருமங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதி ஜான்சங்கர்லால் சுரேஷ், முதன்மை மாவட்ட முன்சீப் கோர்ட் மாஜிஸ்திரேட் பாரதி, கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட் மாஜிஸ்திரேட் ரேணுகா, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் அருண், திருமங்கலம் தாசில்தார் முத்துபாண்டியன், அரசு வழக்கறிஞர் சம்பத் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதற்கான ஆவணங்கள் கிடைத்த பின்பு பணிகள் துவங்க உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Tags : Judges ,location ,court ,
× RELATED தேர்தலில் வாக்களிப்பதை குடிமக்களின்...