×

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் நடந்த பணியை மீண்டும் நடத்த தீர்மானம் கவுன்சிலர்கள் புகார்

தேனி, டிச. 10: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கவுன்சிலர்கள் சின்னப்பாண்டி, வைரமுத்து, ராஜாராம், ஆசைமணி, முருகேஸ்வரி, ராமுத்தாய் ஆகியோர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை மனு அளித்து விட்டு அவர்கள் கூறுகையில், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய, ஜி. உசிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ராமலிங்கபுரம் கிராமத்தில் கடந்த ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் வரும் 11ம் தேதி நடக்க உள்ளது இக்கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானங்களில் ஏற்கனவே ராமலிங்கபுரத்தில் ரூ.7 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட நிழற்குடையை மீண்டும் கட்டுவது போன்று தீர்மான பொருள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல ஏற்கனவே செய்யப்பட்ட 6 பணிகள் மீண்டும் செய்யப்படுவது போல தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்த முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டுமென கலெக்டரிடம் மனு அளித்தோம்’ என்றனர்.

Tags : Councilors ,Andipatti Union ,
× RELATED நகர்மன்ற கூட்டம் தொடர்பாக ஆலோசனை