×

விருப்ப ஓய்வு கோரி அரசு பஸ் டிரைவர் தரையில் படுத்து தர்ணா தேனி டிப்போவில் பரபரப்பு

தேனி, டிச. 10: தேனி மாவட்டம், அரண்மனைபுதூர் பிரிவை சேர்ந்தவர் வடிவேல் (59). தேனி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக கடந்த 28 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் 58 வயது பூர்த்தி அடைந்து கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெறுவதாக இருந்தது. இதற்கிடையே தமிழக அரசு ஓய்வு வயதினை 58ல் இருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. இதனால் ஜூலை மாதம் ஓய்வுபெற வேண்டிய வடிவேலுக்கு போக்குவரத்து கழகம் ஓய்வு வழங்கவில்லை. இந்நிலையில் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த வடிவேலு, தனக்கு விருப்ப ஓய்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், பொது மேலாளர் மற்றும் அரசுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இதுவரை விருப்பஓய்வு வழங்கவில்லை. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான வடிவேலு நேற்று தேனி- பழனிசெட்டிப்பட்டியில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தரையில் படுத்து தனக்கு விருப்ப ஓய்வு வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போக்குவரத்து கழக அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் விருப்ப ஓய்வு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பிறகே வடிவேலு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த போராட்டத்தால் பணிமனையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Government bus driver ,ground ,retirement ,depot ,Tarna Theni ,
× RELATED தேனியில் 2500 அரசு அலுவலர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி