×

தேனி அருகே வீரபாண்டியில் கால்நடை மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் ஓபிஎஸ் நாளை துவக்கி வைக்கிறார்


தேனி. டிச. 10: தேனி அருகே வீரபாண்டியில் காகால்நடை மருத்துவ கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்திற்கான கட்டுமான பணிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை துவக்கி வைக்க உள்ளார். தேனி அருகே வீரபாண்டியில் தமிழக அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் ரூ.265 கோடியில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 253.64 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, சேலம் ஆகிய 5 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. தேனி அருகே வீரபாண்டியில் 6வது கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இந்த ஆண்டில் ரூ.94.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று 10ம் தேதி சென்னையில் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அடிக்கல் நாட்ட உள்ளார்.

நாளை 11ம் தேதி வீரபாண்டியில் கல்லூரி அமைய உள்ள இடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்டுமான பணிகள் துவக்க விழா நடக்க உள்ளது. இதில் கால்நடைத்துறை அமைச்சர், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அரசு கால்நடை கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம் தற்காலிகமாக துவங்குவதற்கு தேனி மாவட்டத்தில் தனியார் கட்டிடம் தேர்வு செய்யப்பட்டு, 2020-21ம் கல்வியாண்டிற்கான 40 மாணவ, மாணவியர்கள் சேர்க்கை நடைபெற அரசால் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தேவதானப்பட்டி அருகில் தனியார் கட்டிடத்தில் துவங்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Tags : OBS ,Veerapandi ,Theni ,
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி