×

அரியலூரில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

அரியலூர், ஆக. 21: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் புதன்கிழமை அன்று நடைபெற்று வருகிறது. நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 30 மனுதாரர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர், உடனடியாக உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

 

Tags : Ariyalur ,Ariyalur District Police Office ,District Police Office ,Ariyalur District ,Superintendent ,Police Vishwesh ,Pa ,Shastri… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா