×

முதல்வர் பதிவு மாவீரர் ஒண்டிவீரனுக்கு வீரவணக்கம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்ட மறுத்து, நெற்கட்டும்செவலை நெற்கட்டான்செவலாக மாற்றி, அந்நிய ஆதிக்கத்திற்குச் சவால் விட்ட தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளில் அவருக்கு என் வீரவணக்கம்!

சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலை உணர்வோடு தென்தமிழ்நாட்டின் தீரர்களான பூலித்தேவனும் படைத்தளபதி ஒண்டிவீரனும் போர் செய்தனர் எனும் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம்.

Tags : Chief Minister ,Ondiveeran ,Chennai ,M.K. Stalin ,Southern Hills War ,British ,Sepoy Revolution ,
× RELATED அரசு பணிகளில் இட ஒதுக்கீடு...