×

போகலூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுக்கு புத்தாடை

பரமக்குடி, டிச.10:பரமக்குடி தாலுகா போகலூர்  ஒன்றிய அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் நடந்தது. போகலூர் ஒன்றிய செயலாளர் நாகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பால்பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சரவணகுமார், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் உதுமான் அலி முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் சுரேஷ் வரவேற்றார். அதிமுக மாவட்ட செயலாளர்  முனியசாமி, பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் ஆகியோர் பாசறை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினர். பின்னர் எம்எல்ஏ சதன் பிரபாகர் ஏற்பாட்டில் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8,000 இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒன்றிய கவுன்சிலர் காளீஸ்வரி விஜயகுமார், ஜெ.பேரவை ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் கற்பகவல்லி முருகானந்தம், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் லோகிதாசன், ஒன்றிய மகளிரணி செயலாளர் அனிதா முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Puttalam ,executives ,AIADMK ,
× RELATED பொதுமக்களிடம் ரூ.3.89 கோடி வரை முதலீடு...