×

தொண்டி அருகே அன்னபூரணி ஆலயத்தில் கும்பாபிஷேக மண்டல பூஜை

தொண்டி, டிச.10: தொண்டி அருகே உள்ள நம்புதாளை அன்னபூரணி சமேத நம்புஈஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக மண்டல பூஜை நேற்று நடைபெற்றது.  தொண்டி அருகே உள்ள நம்புதாளை அன்னபூரணி சமேத நம்புஈஸ்வரர் ஆலய கோவிலில் பைரவர், தட்சிணா முர்த்தி, நவகிரகங்கள், துர்க்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று மண்ட பூஜை நடைபெற்றது. மணிகண்ட குருக்கள் தலைமையில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.  பரிவார தெய்வங்களுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 12 வகை அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுற்றுவட்டாரத்தில்இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். கிராமத்தினர் சார்
பில் அன்னதானம் நடைபெற்றது.

Tags : Kumbabhishek Mandala Puja ,Annapoorni Temple ,Thondi ,
× RELATED கோடையில் இதமான மழை