சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை 5.40 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். வருகிற 23ம் தேதி மாலை 4.30 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார். டெல்லியில் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஆளுநர் ரவி, டெல்லி செல்வதாக கூறப்படுகிறது. ஆனாலும் சுதந்திர தினத்தன்று, ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில், திடீரென 4 நாட்கள் பயணமாக, டெல்லி சென்ற ஆளுநர், டெல்லியில் உள்துறை அமைச்சர் உள்பட சில முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
