×

பாஜக நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளி கைது

விக்கிரவாண்டி, ஆக. 21: விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்த திருவேங்கிடம் மகன் குமரன்(48). பா.ஜ.க. ஒன்றிய தலைவர். இவருக்கும், ஆவுடையார்பட்டு-தொரவி ரோட்டில் நாய் பண்ணை நடத்தி வரும் விழுப்புரம் அடுத்த தொடர்ந்தனூரை சேர்ந்த ஜான்சன் பிரபாகரன்(34) என்பவருக்கும் இடையே நாய் பண்ணைக்கு செல்லும் வழி தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாய் பண்ணையிலிருந்த ஜான்சன் பிரபாகரன், அவரது மனைவி ஐஸ்வர்யா(29) ஆகிய இருவரிடமும் குமரன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஜான்சன் பிரபாகரன் அங்கிருந்த சமையல் செய்யும் ஜல்லி கரண்டியால் குமரனை தலையில் அடித்ததில் தலை சிதைந்து இறந்தார்.

கொலை தொடர்பாக விக்கிரவாண்டி டி.எஸ்.பி. சரவணன், இன்ஸ்பெக்டர்கள் சத்தியசீலன், பாண்டியன் ஆகியோர் ஜான்சன் பிரபாகரன், அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரிடமும் விசாரணை செய்தனர். முடிவில் கொலை செய்த ஜான்சன் பிரபாகரனை கைது செய்து காவலில் வைத்தனர்.நேற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் குமரன் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பிற்பகல் சரளாவிடம் உடலை போலீசார் ஒப்படைத்தனர். தமிழக அரசு சார்பில் விழுப்புரம் புள்ளியியல் துறை ஆய்வாளர் சிவக்குமார், கொலையான குமரன் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் வங்கியில் டெபாஸிட் செய்தார். மேலும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Tags : BJP ,Vikravandi ,Thiruvengidam ,Kumaran ,Avudaiyarpattu ,BJP Union ,President ,Johnson Prabhakaran ,Villupuram ,Nenthanaur ,Avudaiyarpattu-Toravi road ,
× RELATED ஓய்வூதியர் தின விழா