×

யோகிபாபுவுக்கு கூட முதல்வர் பதவி தருவது போல போஸ்டர் ஒட்டினர் அமைச்சர் செல்லூர் ராஜூ ‘கலகல’

மதுரை, டிச. 10: மதுரை தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றும்போது, அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்றனர். வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் நிலம் எடுக்கலாம். ஆர்ஜிதம் பண்ணலாமென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதுபோன்ற திட்டங்களை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா போராட்டம் நடத்தவில்லை.

ரஜினி ரசிகர்கள் அவரை முதல்வர் போல் போஸ்டர் அடித்துள்ளனர். இதன் மூலம் அவர்களது ஆசையைத் தீர்த்துக் கொள்கிறார்கள். யோகிபாபுவுக்கு கூட முதல்வர் பதவி  கொடுப்பது போல் போஸ்டர் ஒட்டி  இருக்கிறார்கள். அதுபோல ரஜினிக்கு ஒட்டி இருக்கலாம். வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமல் உள்ளிட்ட சில நடிகர்கள் ஒன்றிணைந்து போட்டியிட்டாலும், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மத்திய குழு தமிழகத்தில் உள்ள புயல் பாதிப்பு நிலையை ஆராய, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து கண்காணிக்க வந்துள்ளனர். அவர்களுக்கு மொழி பிரச்னை இருக்கலாம். அவர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். தேவையறிந்து எவ்வளவு நிதி கொடுக்கலாம் என்பதை ஆய்வு செய்து கொடுப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Cellur Raju 'Kalakala ,Chief Minister ,Yogibabu ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...