×

கடும் கட்டண உயர்வால் வர்த்தக பயணிகள் வாகனங்கள் பெர்மிட் சரண்டர்கள் அதிகரிப்பு அரசுக்கு வருவாய் இழப்பு

மதுரை, டிச.10:  கடுமையாக உயர்ந்துள்ள கட்டணங்களால் வர்த்தக பயன்பாட்டிற்கான பயணிகள் வாகனங்களின் பெர்மிட்டை சரண்டர் செய்வது அதிகரித்துள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளை தமிழ்நாடு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுடன் தமிழக அரசு இணைத்து விட்டது. இதனால் அபராதத் தொகை, வாகன வரி, சாலை வரி உள்ளிட்டவைகள் பல மடங்கு உயர்ந்து விட்டது. இதில் வர்த்தக வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான வாகன உரிமையாளர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். மேலும் இவர்களது வாழ்க்கையை இது நசிவடையச் செய்து விட்டது.

இதற்கிடையில் கொரோனா ெதாற்று காரணமாக ஊரடங்கானது தளர்வுடன் அமலில் இருந்து வருவதால் சுற்றுலா சுருங்கிக் கிடக்கிறது. இதனால் டாக்சி உள்ளிட்ட வர்த்தக பயணிகள் வாகனங்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றன. சுற்றுலா வாகனத் தொழில் நசிவடைந்து வருவதால் பல உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை விற்று வருகின்றனர். மேலும் பலர் பெர்மிட்டை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சரண்டர் செய்து வருகின்றனர். இதனால் மதுரை மாவட்டத்தில் உள்ள தெற்கு, வடக்கு, மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சரண்டர்கள் அதிகரித்துள்ளதாக வட்டார போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.  * இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘‘வழக்கமான நாட்களை விட தற்போது சரண்டர்கள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 5 பேர்களாவது தங்களது பெர்மிட்டை சரண்டர் செய்ய வருகின்றனர்.‘ இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது’’ என்றார்.

Tags : state ,Loss ,
× RELATED புயலுக்கு கேட்ட நிவாரணம்...