×

பெட்டிசன் மேளாவில் 78 மனுக்களுக்கு தீர்வு

தர்மபுரி, ஆக.21: தர்மபுரியில், மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 78 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில், பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமை வகித்தார். முகாமில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 31 காவல் நிலையங்களில் உள்ள போலீசார் இந்த முகாமில் கலந்து கொண்டு எஸ்பி உத்தரவின்பேரில், புகார் மனுக்கள மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகாமில், 78 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 78 மனுக்களுக்கும் உடன் தீர்வு காணப்பட்டது. மேலும் முகாமில், புதிதாக 42 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், ஏடிஎஸ்பிக்கள் பாலசுப்பிரமணியம், ஸ்ரீதரன், இன்ஸ்பெக்டர்கள், மற்றும் எஸ்ஐக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Mela ,Dharmapuri ,Dharmapuri district police department ,District ,SP ,Maheswaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா