×

அமளிக்கு மத்தியில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல்!!

டெல்லி: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். ஆன்லைன் சூதாட்ட செயலிகளில் பணம் வைத்து விளையாடும் நபர்கள் குறுகிய காலத்திலேயே அந்த விளையாட்டிற்கு அடிமையாகி, பணத்தை இழப்பதோடு தற்கொலையும் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பணம் சம்பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளில் பலரும் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். பல குடும்பங்கள் கடனில் தள்ளப்படுகின்றன.

மேலும், இந்த செயலிகள் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை, நிதி முறைகேடுகள் நடப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 1,500க்கும் மேற்பட்ட அனுமதி பெறாத ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்த போதிலும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இதனால், பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்தும் வகையில் ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதாவை கொண்டு வர ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று வழக்கம்போல் மக்களவை, மாநிலங்களவை கூடியது. இதையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பிற்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 12 மணிக்கு அவை கூடியதும், பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக, மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளிக்கு மத்தியில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா சட்டமானால், தடையை மீறி பணம் வைத்து ஆன்லைன் விளையாட்டு விளையாடினால் ஒரு கோடி ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும். அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Bill ,People's House ,Delhi ,Union Minister ,Kiran Rijiju ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...