சிறுமிகள் கடத்தல், பாலியல் தொல்லைபோக்சோ சட்டத்தில்2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி, டிச.10: ராமநாதபுரம் மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர் சக்திவேல் (31), இவர் தூத்துக்குடியில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர், அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சக்திவேல் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

கோவில்பட்டி: கோவில்பட்டி  திட்டங்குளம் சண்முக நகரைச் சேர்ந்த இருளாண்டி மகன் பாண்டிராஜ்(23) இவர்  17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொந்தரவு  செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை கோவில்பட்டி கிழக்கு காவல்  நிலையத்தில் புகார் கொடுத்தார், அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுதேசன்  தலைமையிலான போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.  நேற்று இருவரையும்  கண்டுபிடித்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்பு பாண்டியராஜன்  மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து  அவரை கைது செய்து சிறையில்  அடைத்தனர்.

Related Stories:

>