ேவளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி புதூரில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

விளாத்திகுளம்,டிச.10:  புரெவி புயல் தொடர் மழை காரணமாக புதூர் உட்பட விளாத்திகுளம் தொகுதியில் மானாவாரி பயிர்கள் சேதம் அடைந்ததையடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச்சட்டம் வேளாண் சேவைகள் திருத்தச்சட்டம் வேளாண்மை உற்பத்தி ஊக்குவிப்பு சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விளாத்திகுளம் தொகுதியில் உற்பத்திக்கு பெயர் பெற்ற குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும். மத்திய அரசினால் விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்படும்  சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அப்படியே பின்பற்றும் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. புதூர் பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதூர் மதிமுக ஒன்றியச் செயலாளர் எரிமலை வரதன் தலைமை வகித்தார்.

புதூர் நகர செயலாளர் வேலுசாமி, ஒன்றிய கவுன்சிலர் பாக்கியலட்சுமி, சின்னவன்நாயக்கன்பட்டி பஞ்.தலைவர் பொம்முசாமி, ஒன்றிய அவைத்தலைவர் செல்லையா, துணைச்செயலாளர்கள் பொம்முசாமி, ராமகிருஷ்ணன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் பால்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், முன்னாள் பஞ்.தலைவர் சங்கையா, மாணவரணி கார்த்திகேயன், தொண்டரணி துணை அமைப்பாளர்கள் ராமச்சந்திரன், சின்னபெருமாள்சாமி, மதிமுக செயலாளர்கள் பொன்ராஜ், சுப்புராஜ், சந்திரன், தொண்டரணி அமைப்பாளர் பெருமாள்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>