×

செய்துங்கநல்லூரில் திமுக கூட்டணியினர் மறியல்

செய்துங்கநல்லூர் டிச.10:  டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக  செய்துங்கநல்லூர் பகுதிகளில் திமுக கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் கருங்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் இசக்கிபாண்டியன் தலைமையில் நடந்த சாலை மறியலுக்கு வடக்கு மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, சுரேஷ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர்கள் டாக்டர் கலீலூர் ரஹ்மான், ஆறாம்பண்ணை பஞ்.தலைவர் ஷேக்அப்துல்காதர், வக்கீல் குணசேகரன், வேல்முருகன், நேரு, சிவஞானம், விஜிலா, முன்னாள் சேர்மன் சுடலை, பாண்டியன், பட்டன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பக்கப்பட்டி சுரேஷ், வி.கோவில்பத்து கண்ணன், கோபால் மாரிமுத்து, வீரபாகு வேல்முருகன், அருணாச்சலம்,  முருகேசன், தர்மலிங்கம், சுடலைமணி, சாமிநாதன் பொன்கனி, மதுபாலா மணி கந்தகுமார், பெருமாள், கருப்பசாமி சகாயம், பட்டு, மகேஷ், இசக்கி, முருகன் மற்றும் காங்கிரஸ், விசிக, முமுக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக்  உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த 95 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உட்பட 100பேரை   வைகுண்டம் டி.எஸ்.பி.வெங்கடேசன், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர்.

Tags : DMK ,allies ,
× RELATED பெரம்பலூரில் அம்பேத்கர் சிலைக்கு...