×

ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

ஊட்டி, டிச. 10:  ஊட்டியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர் விடுதியில் கலெக்டர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்காக ஊட்டியில் உள்ள கூட்செட் பகுதியில் ஆதிதிராவிர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் கட்டுப்பாட்டில் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக இந்த விடுதி மூடப்பட்டிருந்தது. தற்போது கல்லூரி பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், மாணவர்கள் பலர் விடுதிக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா, முறையாக உணவு தயாரித்து வழங்கப்படுகிறதா என்பது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களிடம் கூறுகையில், கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும். விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும், என்றார். இந்த ஆய்வின் போது, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் விடுதி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags : Collector raids ,College hostel ,
× RELATED பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில்...