×

திண்டுக்கல் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் சாவு

திண்டுக்கல், ஆக. 20: திண்டுக்கல் அருகே ரயிலில் அடிபட்டு இறந்தவரின் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் ரவுண்டானா அருகே பழநி ரயில் பாதை தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக பழநி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் எஸ்ஐ ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கோவையில் இருந்து நேற்று முன்தினம் மாலை மதுரை சென்ற ரயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. ஆனால் இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dindigul ,Palani Railway Police ,Palani ,SI… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா