- மண்ணச்சநல்லூர் சாலை
- சமயபுரம்
- Mannachanallur
- திருச்சி-துறையூர் சாலை
- பூனாம்பாளையம்
- திருவெள்ளரை
- புலிவலம்
- துறையூர்
சமயபுரம், ஆக.20: மண்ண ச்சநல்லூர் தாலுக அலுவலகம் அருகே திருச்சி துறையூர் சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் பூனாம்பாளையம், திருவெள்ளறை, புலிவலம், துறையூர் வரை செல்கிறது. மேலும் சுற்று வட்டார பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகாக இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு கோழி கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை இரவு நேரங்களில் சில நபர்கள் பிரதான சாலையோரங்கள், முட்புதரில் மற்றும் சாலையில் ஆங்காங்கே கழிவுகள் சிதறி கிடக்கிறது.
இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு வீசி எறியும் கழிவுகளை ருசிப்பதற்காக வரும் நாய்கள் கூட்டம் அதிகளவில் சாலையில் சுற்றி திரிவதால் விபத்துகள் ஏற்படும் அபாயத்தில் வாகன ஓட்டிகள் பீதிஅடை ந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் இதுபோன்ற சாலையோரம், சாலையில் கோழி கழிவுகளை கொட்டி செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
