- புதுக்கோட்டை அஞ்சல் துறை
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை தெற்கு பிரிவு அஞ்சல்
- இன்ஸ்பெக்டர்
- ஸ்ரீ ஷாலினி
- பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு
- எஸ்ஐ
- மெய்யம்மாள்
புதுக்கோட்டை, ஆக. 20: புதுக்கோட்டையில் காவல் உதவி செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை தெற்கு கோட்ட அஞ்சல் ஆய்வாளர் ஸ்ரீஷாலினி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்ஐ மெய்யம்மாள், காவல் உதவி செயலியின் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள் மற்றும் நவீன சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பேசினார். இந்நிகழ்வில், புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட பெண் தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் பணியாளர்கள் 70 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
