×

தொடர் மழையால் வால்பாறை பகுதி அருவிகளில் தண்ணீர் வரத்து

வால்பாறை,டிச.10:  புெரவி புயல் காரணமாக வால்பாறை, அட்டகட்டி, பகுதியில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை  சாரல் மழை பெய்தது. இதனிடையே மூடுபனியும் நீடித்து வருகிறது. மூடுபனி காரணமாக பொதுமக்கள், வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மழையால் சிற்றோடைகள், காட்டாற்று அருவிகள், மற்றும் சோலையாறு, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள குரங்கு அருவியிலும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வரண்ட நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

மோதிராபுரம் செல்லும் வழியில்
சேறும் சகதியுமான சாலையால் மக்கள் அவதி

பொள்ளாச்சி, டிச.10: பொள்ளாச்சி மோதிராபுரத்துக்கு செல்லும் வழியில் சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் சில இடங்களில் பாதாள சாக்கடை பணியை நிறைவடையவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், சில இடங்களில் பாதாள சாக்கடைக்கு என தோண்டப்பட்ட ரோட்டை முறையாக சரி செய்யாதால் அப்பகுதி முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது.

இதில், ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் மோதிராபுரம் செல்லும் சாலையில் அண்மையில், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை பணி நடைபெற்றுள்ளது.  ஆனால், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட மண்ணை  முறையாக மூடி ஆங்காங்கே குவித்து போடப்பட்டதால், நேற்று முன்தினம் பெய்த கன மழைக்கு சேறும் சகதியுமானது. செம்மண் நிறத்தில் சாலை இருப்பதுடன், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு உள்ளது.மேலும்,  வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மோதிராபுரம் செல்லும் வழியில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area waterfalls ,Valparai ,
× RELATED கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது