×

திமுக ஐடி விங்க் நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை

தர்மபுரி, ஆக.20: தர்மபுரியில் கடந்த 17ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று, நலஉதவிகளை வழங்கி பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். பயணியர் மாளிகையில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக ஐடி விங்க் நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். வரும் சட்டமன்ற தேர்தலில் ஐடி விங்கின் பணிகள் குறித்தும், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக ஐடி விங்க் ஒருங்கிணைப்பாளர் கவுதம் தலைமையில், துணை அமைப்பாளர்கள் உதயசூரியன், ஈஸ்வர் உள்ளிட்ட ஐடி விங்க் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,DMK IT Wing ,Dharmapuri ,DMK ,President ,M.K. Stalin ,House ,East… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா