கெங்கவல்லி, ஆக.20: கெங்கவல்லி இந்திரா காலனியை சேர்ந்தவர் வேணுகுமார். நேற்று மதியம் 12 மணியளவில் பாம்பு ஒன்று, இவரது வீட்டுக்குள் புகுந்தது. இதைப்பார்த்த குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையில் வந்த வீரர்கள் வீட்டுக்குள் இருந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை உயிருடன் பிடித்து, கெங்கவல்லி வனசரகர் கமலக்கண்ணனிடம் ஒப்படைத்தனர். அவர் வனப்பகுதியில் பாம்பை விடுவித்தார்.
