நாகர்கோவிலில் பாஜ மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

நாகர்கோவில், டிச. 10: குமரி மாவட்ட பாஜ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோயிலில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், கோட்ட அமைப்பு இணைச்செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் முத்துராமன், துணைத்தலைவர்கள் தேவ், முருகன், ஜெகநாதன், மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ராஜன், மாநில இளைஞரணி செயலாளர் சிவபாலன், நிர்வாகிகள் சீனிவாச பிரமா, அஜித்குமார் உட்பட பலர் கலந்து ெகாண்டனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். வரும் சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் வெற்றிப்பெறவேண்டும். மேலும் பா.ஜ கிளை நிர்வாகிகள் கூட்டம் கூட்டி, பூத் கமிட்டியின் செயல்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும். மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் சென்றடைய நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>