×

சங்கராபுரம் ஏரி உடைப்பு: விவசாயிகள் அதிர்ச்சி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே சங்கராபுரம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவர் புயல் மற்றும் புரெவி புயலால் 200க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் இந்த ஆண்டு விவசாயம் செய்யும் விவசாயிகள் போதிய  நீர்வரத்து உள்ளதால் விவசாய பணிகளை மேற்கொள்ள முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வாலாஜாபாத் சுற்றி உள்ள பல்வேறு ஏரிகளின் மதகுகள் மற்றும் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வாலாஜாபாத் அடுத்த சங்கராபுரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் நேற்று காலை ஏரியின் மதகு அருகாமையில் நீர் கசிந்து உடைப்பு ஏற்பட்டு வயல்வெளிகள் முழுவதும் நீர் நிரம்பி ஓடையின் வழியாக வெளியேறின.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறை, ஒன்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் நீர் வெளியேறாமல் இருக்க ஏரியின் மதகு பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி நீர் தடுத்து நிறுத்தினர். மேலும் இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் இந்த ஏரி பாசன மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும். தற்போது தண்ணீர் பாதி அளவு வெறியேறி உள்ளதால் முப்போக விளைச்சல் என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றனர்.
மதகு பகுதியில் திடீரென ஏரிக்கரை உடைப்பால் இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Sankarapuram Lake Breakdown ,
× RELATED சங்கராபுரம் ஏரி உடைப்பு: விவசாயிகள் அதிர்ச்சி