×

சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன

 

ராஜபாளையம், ஆக.19: ராஜபாளையத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன.ராஜபாளையம் தர்மாபுரம்  மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் முன்பு உள்ள அலங்கார பந்தலில் சிலைகள் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இவை ஊர்வலமாக மதுரை சாலை புகழேந்தி சாலை வழியாக தர்மபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலை நேற்று வந்தடைந்தன. அருள்மிகு அருள் பொருள் அருளும் கணபதி, பின்புறத்தில் மங்கள கணபதி மற்றும் விஜய கணபதி, சயன கணபதி, ஆனந்த கணபதி மிர்த்தன கணபதி ஆகிய விநாயகர் சிலைகள் மதுரை சாலை பஞ்சு மார்க்கெட் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள மாப்பிள்ளை விநாயகர் கோயில் திடலில் அலங்கார பந்தலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Chaturthi festival ,Ganesha ,Rajapalayam ,38th Ganesha Chaturthi festival ,Rajapalayam Dharmapuram ,Mappillai Vinayagar Narpani ,Mandram ,Rajapalayam Mayuranathar Swamy ,Temple… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா