×

திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அண்ணா அறிவகம் கணினி கட்டுப்பாட்டு அறை திறப்பு: அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு

 

மதுரை, ஆக. 19: மதுரை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக. ஓரணியில் தமிழ்நாடு ஒருங்கிணைப்பிற்கான அண்ணா அறிவகம் கணினி கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி நேற்று திறந்து வைத்தார். திமுக தேர்தல் பணியின் ஓர் நிகழ்வாக ஓரணியில் தமிழ்நாடு எனும் முன்னேடுப்பின் கீழ், புதிய உறுப்பினர் சேர்க்கையினை நடத்தி வருகிறது. இதன்படி மதுரை வடக்கு மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், அண்ணா அறிவகம் என்ற பெயரில் புதிய கணினி கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டுமென, திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிவுறுத்தினர்.

Tags : DMK IT ,Anna ,Minister ,P. Murthy ,Madurai ,Madurai North District DMK IT ,District Secretary ,Arivagam ,Tamil Nadu ,DMK ,
× RELATED ஓய்வூதியர் தின விழா