×

பழைய கட்டிடத்தின் பால்கனி இடிந்து ரோந்து பைக் சேதம்

தண்டையார்பேட்டை: மண்ணடி டேவிட்சன் தெருவில்  கொத்தவால்சாவடி காவல் நிலையம் அருகே பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இந்த கட்டிடம் முழுவதும் நனைந்து இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கட்டிடத்தின் பால்கனி திடீரென இடிந்து விழுந்ததில், காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ரோந்து பைக்குகள் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்தன.
சம்பவத்தின் போது, போலீசார் யாரும் அங்கு இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த பகுதியில் பழமையான  கட்டிடங்கள் அதிகளவில் உள்ளதால், இதுகுறித்து ஆய்வு நடத்தி, ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : balcony ,building ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...