குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

அம்பத்தூர்: கொரட்டூர் வெங்கட்ராமன் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்.  தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் தினகரன்(12). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று தினகரன் தனது நண்பர்களுடன் கொரட்டூர் சாவடி தெருவில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில் குளத்தில் குளித்தனர். தினகரன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்று விட்டான். அவனுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினான். சக நண்பர்கள் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தனர். அதற்குள் தினகரன் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டான். தகவலின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டனர். கொரட்டூர் போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Related Stories:

>