×

‘ஆயுஷ்’ மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு நாகர்கோவிலில் மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச.9: ஆயுஷ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வழிவகுக்கும் ஆணையை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி நாகர்கோவிலில் அனைத்து இந்திய மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய வகை மருத்துவ மத்திய சபையின் தனி மனித பாதுகாப்பற்ற அறிவிப்பான ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஓமியோபதி அடங்கிய ஆயுஷ் மருத்துவர்கள் மனித உடலை அறுவை சிகிச்சை செய்ய வழிவகுக்கும் மத்திய அரசின் ஆணையை திரும்ப பெற வேண்டும். எல்லா அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளையும் ஊக்குவித்து ஒருங்கிணைந்த மருத்துவமனைகளை வளர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி என அனைத்து மருத்துவ துறைகளையும் ஒரே மருத்துவமனையில் உள்ளடக்க வேண்டும்.  மருத்துவத்துறைகளுக்குள் அதன் தன்மைக்கு ஏற்ப பல்துறை மருத்துவர்களும் நோயாளிகளை பரிந்துரைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் டாக்டர் விஜயகுமார் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் தாணப்பன், டாக்டர்கள் சிவகுமார், திரவியம் மோகன், ராதாகிருஷ்ணன் உட்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் சங்க நிர்வாகிகள் பேசியதாவது:

 மத்திய அரசின் நோக்கம் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே சட்டம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை, ஒரே அடையாள அட்டை போன்று ஒரே சிகிச்சை முறை என்ற கொள்கையை மருத்துவ துறையில் கொண்டு வருவது மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. இது நவீன மருத்துவ வளர்ச்சிக்கு குந்தகமாக இருப்பதுடன் நவீன மருத்துவத்தின் ராக்கெட் வேக வளர்ச்சியை அதல பாதாளத்திற்கு தள்ளும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
எனவே இந்திய வகை மருத்துவ மத்திய சபையின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். இதற்காக ஏற்படுத்தப்பட்ட 4 குழுக்களை கலைக்க வேண்டும். ஆயுஷ் மருத்துவர்களுக்கான அறுவை சிகிச்சை மேற்படிப்பை ரத்து செய்ய வேண்டும். நவீன மருத்துவத்தை அரசும், தேசிய மருத்துவ குழுமமும் பாதுகாக்க வேண்டும். மக்கள் நலனுக்கு எதிரான இந்த திட்டத்தை பொதுமக்கள் நாட்டு நலனுக்காக எதிர்க்க வேண்டும். அரசு ஒவ்வொரு மருத்துவ துறையையும் தனித்தனியாக வளர வைத்து அதனுடைய கட்டமைப்பு ஆராய்ச்சிகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவித்து தனித்தனியாக வளர வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

Tags : protests ,Nagercoil Doctors' Federation ,AYUSH ,doctors ,
× RELATED மிகக்குறைந்த கட்டணத்தில் தஞ்சாவூர்...