×

அஜித்குமார் கொலை வழக்கு சாட்சியான வக்கீலுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிலைக்குழு உத்தரவு

 

திருப்புவனம்: அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சியான வழக்கறிஞருக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிலைக்குழு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கை, கொலை வழக்காக பதிந்து சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் முக்கிய ஆவணங்களை சேகரித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய காரணமானவர் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா. இவர் இந்த வழக்கின் சாட்சிகளில் ஒருவராக உள்ளார்.

இவர் அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கும், தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு கேட்டிருந்தார். இதுகுறித்து, அவர் சிவகங்கை மாவட்ட நீதிபதி, மாவட்ட எஸ்பி, மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆகியோர் அடங்கிய மாவட்ட நிலைக்குழுவில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன்பேரில் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி, வழக்கறிஞர் கார்த்திக் ராஜாவுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிலைக்குழு உத்தரவிட்டுள்ளது.

 

Tags : District Standing Committee ,Ajith Kumar ,Thiruppuvanam ,CBI ,Madapuram ,Sivaganga district ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...