வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் நியமனம்

நாமக்கல், டிச.9: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவராக ஜெயக்குமார் வெள்ளையன்(49) ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மாநில தலைவர் விக்கிரமராஜா, நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவித்தார். ஜெயக்குமார், தற்போது பேரமைப்பின் மாவட்ட செயலாளராகவும், நாமக்கல் மர வியாபாரிகள் மற்றும் அறுவை ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்புவகித்து வருகிறார். இது குறித்து, புதிய மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கூறுகையில், ‘மாவட்டம் முழுவதும் உள்ள 55 வணிகர் சங்கங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பிற்கு, வணிகர்கள் அளித்து வரும் ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்க வேண்டும். பேரமைப்பை மேலும் வலுப்படுத்த உதவவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

>