×

காமராஜர் சிலையை சீரமைத்து மணிமண்டபம்

நெல்லை, டிச. 9:  நாங்குநேரி அருகே பழுதடைந்துள்ள  காமராஜர் சிலையை சீர்செய்து, மணிமண்டபம் கட்ட நிதியுதவி செய்வதாக, கிராம மக்களிடம் உறுதி அளித்த காங்கிரஸ் பிரமுகர் நாங்குநேரி ரூபி மனோகரன் முதற்கட்ட நிதியையும் வழங்கினார். நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பருத்திப்பாடு பஞ்சாயத்து சுருளை கிராமத்தில் காமராஜர் சிலை, 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. சிமெண்டால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலை, கடந்த 5 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இன்றி சிலையின் சில பகுதிகள் சேதமடைந்தன. இந்தக் கிராமத்திற்கு வந்த காங்கிரஸ் பிரமுகர் நாங்குநேரி ரூபி மனோகரனிடம்,  கிராம மக்கள், காமராஜர் சிலையை புதுப்பிக்க கோரிக்கை விடுத்தனர்.அதை ஏற்றுக்கொண்ட நாங்குநேரி ரூபி மனோகரன்,  காமராஜர் சிலையை சீரமைக்கவும், செப்பனிடவும், அங்கே மணிமண்டபம்  அமைக்கவும், தனது சொந்த செலவில் இருந்து நிதி தருவதாக உறுதியளித்தார்.

அதன் அடிப்படையில் நெல்லை மகாராஜநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நாங்குநேரி கிழக்கு வட்டார காங்.  தலைவர் ரவீந்திரன், சுருளை கிராம காங். தலைவர் சுருளை மணி, சுடலை மணி, சுருளை ஊர் நாட்டாண்மை  குமாரவேல், சுப்பையா நாடார், மாடசாமி, இசக்கிமுத்து, ராமகிருஷ்ணன், ஆசிரியர் பலவேச குமார், கிருஷ்ணன், ஐசக், ஆழ்வாநேரி கிராம காங். தலைவர் சந்தோஷ்குமார், சுருளை கிராம காங். நிர்வாகிகள், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்போர்டு,  பாளை. தெற்கு வட்டார காங். தலைவர் கணேசன், திருக்குறுங்குடி நகர பொறுப்பாளர் ராஜாத்தி, நாங்குநேரி நகர கமிட்டி சுடலைக்கண்ணு, மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஜெஸ்கர்ராஜா, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், மூலைக்கரைப்பட்டி நகர பொறுப்பாளர், முத்துக்கிருஷ்ணன், கிராம காங். தலைவர் நளன், மீரான், பாண்டியராஜ் ஆகியோர் முன்னிலையில் முதற்கட்ட நிதிக்கான காசோலையை சுருளை கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர், ஊர் நாட்டாமை, இளைஞர்களிடம் வழங்கினார்.

Tags : Kamaraj ,
× RELATED நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக...