×

தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயர் பரிந்துரை மருதம் நலச்சங்கம் முதல்வருக்கு பாராட்டு

நெல்லை, டிச. 9:  தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரை பரிந்துரை செய்வதாக அறிவித்த தமிழக முதல்வருக்கு மருதம் நலச்சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.பாளையங்கோட்டை கேடிசி நகரில் மருதம் நலச்சங்க சிறப்பு கூட்டம், சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரை தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய ஏழு பட்டியலின உட்பிரிவுகளுக்கு வழங்க பரிந்துரை செய்வதாக அறிவித்த தமிழக முதல்வருக்கு சங்கத்தின் சார்பில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

Tags : Devendrakula Vellalar Common Name ,
× RELATED திமுக நிறைவேற்றிவிடும் என்பதாலேயே...